Saturday, August 01, 2009

அனைவருக்கும் வணக்கம்!

தமிழில் பல நாட்கழாய் ஒரு கட்டுரை இங்கு எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை. இன்று அதை நிறைவேற்ற முடிவு செய்தேன். இந்த பக்கங்களில் பின்னர் நீங்கள் கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் சில கட்டுரைகளை எதிர்பார்க்கலாம். தற்சமையம் தமிழை கவனிப்போம்.

தாய் மொழியாம் தமிழில் எழுதுவதில் இருக்கும் இன்பமே இன்பம். எனக்கு சிறு வயதிலிருந்து தமிழ் மேல் ஒரு ஈர்ப்பு. நான் ஐந்தாம் அல்லது ஆறாவது வகுப்பு படித்து கொண்டிருக்கையில் என் தங்கையும் நானும் வேண்டுமென்றே வெவ்வேறு பொருள் அல்லது மொழி தான் எங்களுக்கு பிடிக்கும் என்று கூறி அவற்றின் புகழ் பாடுவது வழக்கம். அவள் காரம் தான் சாப்பிடுவேன் என்பாள், நான் இனிப்பு. பறவை பிடிக்கும் - பார்க்க பல வண்ணங்களுடன் இருப்பதால் என்று அவள் சொல்ல, மிருகங்கள் தான் எனக்கு பிடிக்கும் என்பேன். தமிழை நான் பற்றிக்கொண்டேன் - அவள் ஆங்கிலம் பிடிக்கும் என்று சொல்லுவாள்.

நான் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளும், கவிதைகளும், சிறு கதைகளும் எழுதியதுண்டு - தமிழில் எழுதுவது மிக குறைவாயிற்று. காரணம், படித்ததெல்லாம் ஆங்கிலத்தில் - தமிழ் வெறும் ஒரு பாடம் மட்டும் தான். நான் எழுதிய தமிழ் கட்டுரைகளும், கவிதைகளும் வெறும் தேர்வுக்காக எழுதியது தான். இதை சொல்ல நான் மிகவும் வெட்கப்படுகிறேன். இத்தனை ஆண்டுகள் தமிழிற்கு நான் செய்த மோசத்தை இனி ஈடுகட்ட முயற்சிக்கிறேன் இந்த பக்கங்களில்.

நான் இந்த முயற்சியை செய்யும்போது நீங்கள் அனைவரும் சற்று பொறுமையுடன் இருக்குமாறு வேண்டுகிறேன். காரணம் எனது மூழை பல வருடங்களின் உபயோகம் செய்யாமல் விட்டதனால் சற்று பழுதடைந்துவிட்டது. மேலும், google indic transliteration tool ஒரு அழவிற்குதான் செயல்படும். நான் சரியாக கவனிக்கவில்லையென்றால் கண்ட ல-ழ வை போட்டுவிடும். இவற்றை போன்ற பிழைகளுக்கு என்னை மன்னிக்கவுன். என்னால் முடிந்த வரையில் நான் இது போன்ற பிழைகல்லை திருத்த முயல்கிறேன்.

மற்றவை பின் வேறு கட்டுரையில் எழுதுகிறேன். இப்பொழுது நீங்கள் படித்த இந்த கட்டுரையில் முக்கிய செய்தி ஒன்றும் இல்லை. இது ஒரு முதல் முயற்சி - அவ்வளவுதான். ஒரு பிதற்றல் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

No comments: